விலைமாதின் மகளிவள்

உன்மேல ஆசைப்பட்டு ஒரு
தலையா காதலிச்சே என்னாசை
சொன்னபின்னு உன்னோடெனை
சேத்துக்கதான் பிடிக்கலையோ
பித்துபிடித்த ஏமனசு நான் சொன்ன
சொல்லுகேக்கலியே அத்தானே
என் மனசு நித்தமுந்தான் உனக்காக
குமுறி குமுறியே குருதி வடிக்க
மச்சானே நீ சொல்லு நானென்ன
உனக்கு தீண்டதகாதவளா சாக்கடை
நீர்கொண்டே மலர்வதால் மல்லிகை
பூ என்ன மணமிழந்தா போய்விடும்
மாதவியாய் வாழ்ந்ததேன் தாயன்றே
மாசற்ற மகள் மணிமேகலையும் என்
சாதியென்று சொல்லித்தரவேண்டுமா ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்......