முரண்பாடுகள்

முரண்பாடுகள் ! 15.11.2012

தண்ணீர் குழாயயடியில் காலையில்
சண்டை பக்கத்துக்கு வீட்டு அக்கா
பரமேஸ்வரியோடு தனலட்சுமிக்கு
காவேரி நீர் பகிர்தல் போராட்டம் மத்தியானம்
இப்பவே ரொம்ப நேரம்மாச்சு இவ வேற ,
போகலேன்ன பணம் கெடைக்காது !

நிதி மந்திரி வருடாந்தர மாநில
பட்ஜெட் தயாரித்து பார்த்தார்
வரும் ஆண்டு மது பான விற்பனை
வருமானம் இரண்டு மடங்கு கூடும்
சாயங்காலம் மது விலக்கு மக்கள்
மாநாட்டில் முதல்வருக்கு தெரிவிக்கோணம் !

எப்ப பாத்தாலும் பசங்க வீடு முழுக்க
பேப்பர கிழிச்சு போட்டு அசிங்கம்
காம்பௌண்டு சுவர் தாண்டி குமாரு
தெருவில் வீசினான் பிளாஸ்டிக் பையை
குப்பை தொட்டி கொஞ்சம் தள்ளி காத்திருந்தும் !

தாய் மொழியில் கல்வி என்பது
தமிழனின் மிகப்பெரிய கனவு
செந்தமிழ் பேரவை ஆண்டு விழாவில்
கவிஞர் குரலோவியம் முழங்கினார் !
வந்திருக்கிற எம்பி கிட்ட பேரன்
கேரமல் கான்வென்ட் அட்மிசனக்கு
சிபாரிசு கடிதம் இன்னக்கே கேட்கோணும் !

சும்மா சொல்லகூடாது இளங்கோ
சிக்கன் வறுவல் நேத்து சுப்பர்
கைபேசியில் நண்பனுக்கு பாராட்டு,
அப்பறம் மாமிசம் விட்டுடுங்க
அதில நெறைய கிருமிகள் இருக்கு
டாக்டர் சேகர் நோயாளிக்கு சொன்னார் !

விந்தை மனிதர்கள் இவர்கள்
முரண்பாடுகளின் மொத்த பெயர் - மனிதன் !

எழுதியவர் : கர்ச்சாகின் (13-Feb-14, 6:58 pm)
பார்வை : 63

மேலே