கட்டுச்சோறு கட்டு

கட்டுச்சோறு கட்டு

கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
பட்டணந்தான் போறவுக
பத்திரமாப் போய் வாங்க!—உங்க
பொட்டணத்த இழுத்து மூடுங்க

கொத்த வேல தேடிக்கிட்டு
கொத்தனாரா போறவுக
வெத்தலைய மடிச்சிப்போடுங்க—எங்கள
சத்தியமா மறந்திடாதங்க.

ஒட்டுச்சாரம் ஏறும்போது
உசரத்துல நிக்கிம்போது
எட்டி சாந்து எறியும்போது—நீங்க
எச்சரிக்கையாக இருங்க.

அக்கம்பக்கம் பாத்துக்கிட்டு
அடுத்தவட்ட சிரிச்சிக்கிட்டு
வெக்கம் கெட்டுப் பேசாதீங்க –எனக்கு
சக்களத்தி தேடாதீங்க.

சாந்து சட்டி வாங்கயில
சரிஞ்சு விழும் மாராப்பில
ஆந்தக்கண்ணு போடாதீங்க—என்ன
அலையை விட்டு ஓடாதீங்க.

வேலையில கவனம் வச்சு
மாலையில என நினச்சு
விலகாம கோமணத்த—சாமி
வீடுவரை இறுக்கி வாருங்க.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (13-Feb-14, 7:19 pm)
பார்வை : 268

மேலே