மனதுக்குள் ஆயிரம் நினைவுகள்

ரிங் ரிங் என‌
மணி அடிக்க

ஆவலாய் அலைபேசியை
எடுக்க நான் செல்ல‌

வீட்டில் உள்ள
பெரியவர்களும் சிறியவர்களும்
காணாமல் போக‌

மனதுக்குள் ஆயிரம் நினைவுகள்

அனைத்தையும்
ஆசை கணவனிடம்
சொல்ல நா துடிக்க

ஏதோ மனதில்
புரியாத வெட்கம் தடுக்க‌

ம் அப்புறம் ம் அப்புறம்
என்று நாழிகை செல்ல‌

என்ன பேசுவது என்று
புரியாமலே அலைபேசியை
வைத்துவிட்டு

நீ பேசியது ஒன்றுமே
நினைவில் இல்லை
உன் குரலைத் தவிர‌

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (13-Feb-14, 6:58 pm)
பார்வை : 324

மேலே