காதல் தினம்

நாளைப் பூக்கும்
பூக்கள் எல்லாம்
நம் காதல்
சொல்லிப் பிறக்கட்டும் !

வீசும் காலைத்
தென்றல் சேர்த்தணைத்து
நாம் மகிழ்வோம்,
நம் காதல் நினைவுகளில் !

நம்மிரு காதற்
பார்வையிலே நாம்
நனைவோம் ஓர்
பனி மலராய் !

மறந்திடாத நிகழ்வுகளையும்
மறுத்திட்ட வேளைகளையும்
மறுமுறை ரசித்திடுவோம் !
மலர்க் கரங்கள் இணைத்து !!

நாம் ஒன்றிணையும்
நொடிகளைப் பதித்திடுவோம் ,
நம் காதல் மாளிகையில் !

நாம் சிந்தும்
வார்த்தைகள் கோர்த்தெடுத்து
முத்தாரம் சூட்டிடுவோம்
நம் காதலுக்கு !

பிரிந்திருக்கும் நேரங்களில்
இணைந்திடுவோம் காதல்
எண்ண அலைகளின் வழியே !

இமைகள் திருடிக்
காதலிப்போம் ,இனிமையைப்
பரிசாய்த் தந்திடலாம் , உலகக்
காதலருக்காக !

தினந்தினம் காதல்
கொண்டாடிவோம் !
தித்திக்கும் காதலுக்கு
எந்நாளும் காதலர் தினமே!

எழுதியவர் : கார்த்திகா AK (13-Feb-14, 6:25 pm)
Tanglish : kaadhal thinam
பார்வை : 242

மேலே