பேராசை

அரசர் ஒருவர் ஒரு நாள் நகர்வலம் போய்க்கொண்டிருந்த போது , வழியில் துறவி ஒருவரை சந்தித்தார் :
'' சுவாமி ....என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் !''
என்றார் அவரிடம்அரசர் :
'' ஹா ஹா ஹா ...நான் வேண்டுவதை தங்களால் கொடுக்க முடியாது !''
சொன்ன துறவியை கோபத்துடன் ஏறிட்டார் அரசர் :
''....ஏன் முடியாது ?... அரண்மனைக்கு வாருங்கள் !..வேண்டிய மட்டும் பெற்றுக்கொள்ளலாம் !''.
நகர்வலம் முடித்து விட்டு துறவியுடன் அரண்மனைக்கு வந்தார் அரசர் :
'' ம் ம் ம் ...இப்போது என்ன வேண்டும் கூறுங்கள் ...!''
கேட்ட அரசரிடம் தன் பிச்சை பாத்திரத்தை நீட்டியாவாறே துறவி ,
'' இது நிறைய தங்ககாசுகள் தாருங்கள் !''
'' பூ ...இதென்ன பிரமாதம் ?....''
என்ற அரசர் , பொற்காசுகளை கொண்டு வரச்சொல்லி பாத்திரத்தில் போட ....ஊஹூம் ...
பாத்திரம் நிறைந்தபாடில்லை !...மேலும் மேலும் காசுகள் போட்டும் , பாத்திரம் உள்வாங்கி கொண்டிருந்ததே தவிர .....பாத்திரம் நிறைந்தபாடில்லை !
இப்போது அரசரின் கர்வம் அகன்றது !..துறவியின் பாதங்களில் பணிந்தார் !
துறவி விளக்கினார் :
'' அரசே ....இந்த பாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது ! ஏனென்றால் , பேராசைகளுடன் வாழ்ந்து மடிந்து போன ஒரு மனிதனின் மண்டை ஓடு இது ! ''.

எழுதியவர் : முரளிதரன் (14-Feb-14, 12:49 pm)
Tanglish : peraasai
பார்வை : 228

மேலே