சாமி கண்ணு பட்டுருச்சு

ஆத்தாக்கு தெரியாம
நீ தந்த பூவாதான்
தலையில வச்சேனே
தலைசுத்தி போனேனே

சந்தைக்கு போனாதான்
சாந்து பொட்டும்
சக்கர வளையலும்
வாங்கி தந்தீரே
கைநெறய போடயில
சந்தோசம் பொங்குதையா

மாமா உனக்கு
சோறு நான் ஊட்டயில
என் மனசும்
வயிறும் நிறைஞ்சு தான் போகுதையா
உன் எச்சிசோறும்
அமிர்தம் தான் எனக்கையா

என் சந்தோசம்
பார்த்து தான்
சப்பரம் ஏறி தான்
சாமியும் வந்ததையா

வந்த
சாமி கேட்டதையா
சொர்க்கம் உனக்கு வேணுமானு?

மாமன் மாருல
என் மரணம் கிடைச்சாலே
சொர்க்கம் நான் போயிருவேன்
சந்தோசமா சொன்னெனையா

சாமியும் சிரிச்சிட்டு
வண்டியதான் விட்டதையா

சுத்தி தான் போடனும்யா
சாமி கண்ணு பட்டதையா .....

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (14-Feb-14, 1:01 pm)
பார்வை : 143

மேலே