ஒரு சிட்டுக் குருவியின் கவிதை

தேனைத் தேடி பறந்து வந்தேன்
தென்பட்ட விஷத்தால் கசந்து நின்றேன்
வாழ்க்கை இதுவெனப் புரிந்து விட்டேன்
வண்ணமாய் சுதாரிக்க பழகி விட்டேன்.....
ஆசையில் மயங்கா மனம் வேண்டும் - இல்லையேல்
ஆபத்தில் மாயவே வழி தோன்றும்.... எனவே
படபடக்கும் இறகில் பக்குவம் வைப்பேன் - ஏ
பகவானே காத்தருள் என பக்தியும் வைப்பேன்....