ஒரு வாழையின் வரலாறு

மண் வளத்தை காக்கவே மரமாய் பிறந்தேன்...
மண்ணை காத்த பெருமைக்கு மணவறையில்
இடம்தந்தார்கள் மகிழ்ந்தேன் ......

மணிக்கணக்கில் நின்றது போதும் என
மதிய விருந்துக்கு மாற்றம் செய்தார்கள் சிதைந்தேன்

விருந்தாய் இருந்தும்.. விழி இழந்து நடந்து விட்டு..
விழவைத்தேன் என்றார்கள் பழிசுமந்தேன்...

இளமை மரணத்திற்கும் என்னை பலி கொடுத்தார்கள்
இருந்ததையும் இழந்தேன்...

நான்காய் சிதைந்தும் நாராய் வாழ்ந்தும்..
நாற்றம் என்றார்கள் நம்பிக்கை இழந்தேன்....

வாழ்வையே பறித்து விட்டு..
வாடிவிட்டேன் என்றார்கள் வலுவிழந்தேன்..

உள்ளதையெல்லாம் பறித்துவிட்டு.. இனி..
உதவாது என்றார்கள் உண்மையிலேயே..
அப்பொழுது தான் ""இறந்தேன்""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (14-Feb-14, 10:12 pm)
பார்வை : 91

மேலே