குஷி

ஒரு பெண் குழந்தை இரவு படுக்க போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள் .
" கடவுளே என் அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை " என்று வேண்டுவாள் . இதை அவள் தந்தை பெருமையாக கேட்டு மகிழ்வார் .

ஒரு நாள் அவள் " கடவுளே என் அப்பா , அம்மா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை
தாததா Bye Bye " என்று சொன்னாள் . அப்பா திடுக்கிட்டார் .
அடுத்த நாள் தாத்தா இறந்து விட்டார் ....

சில மாதங்களுக்கு பிறகு இதே கதை பாட்டிக்கும் நடந்தது ......
அப்பா பயந்து நடுங்கி விட்டார் .....

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவள் "" கடவுளே என்னயும் அம்மாவையும் குஷியாக வை அப்பா Bye Bye " என்றாள் . அடுத்த நாள் பூரா அப்பாவுக்கு ஒரே டென்ஷன் . வேலை எதுவும் ஓடவில்லை. நடுங்கிக்கொண்டே நாள் முழுதும் கழிந்தது . ஆபீசிலிருந்த திரும்பி வந்த மனைவியும் டென்ஷன் ஆக காணப்பட்டார் .
"உனக்கு என்ன ஆச்சு " என்று கேட்டார் அப்பா

" இன்னிக்கு ஆபீஸ்ல எங்க பாஸ் திடீர்னு மயங்கி விழுந்து
செத்துட்டார் "

எழுதியவர் : முரளிதரன் (15-Feb-14, 10:06 am)
பார்வை : 171

மேலே