பொட்டல் காட்டின் அழுகுரல்
தரிசாய் கிடந்த என்னை
அழகாய் செதுக்கி! நிலமாய் ஆக்கி!
வயலாக மாற்றி வயிற்றை நிறைக்க!
அனுதினம் என்னுள் மூழ்கி!
உழைத்து பிழைத்தான் உன் முன்னோர்!!
வறுமை நிலை நீ அறியா வாழ்ந்திட...
புத்தக பையை உன் முதுகில் ஏற்றி!
உன்னை பெற்றவர் தோழிள் சுமந்தானே!
கல்வி கண் திறந்து! வறுமையை ஒழித்தானே!
நீயும் வயலையும் மறந்தாயே!!
கல்வி கண் திறக்க...
ஒரு போகம் போதாதென்று
இருபோகமும் நான் தந்தேன்!
அதுவும் போதாமல்
முப்போகம் தந்துதவினேனே!!
ஒரு பிள்ளை பிரசவிக்க எத்தனை
வலியென்று உன் தாயும் உணர்வாலே!
முப்போகம் பிரசவிக்க எத்தனை
வலியை அனுபவித்தேன்!!
என்பதனை நீயும் மறந்தாயே!!
படித்து முடித்து பட்டணம் சென்றாயே!
ஒரு விதை நீ தந்தாள்
நூறினை நான் தருவேன்!!
எட்டி உதைத்து எனை சிட்டென பறந்தாயே!!
பருவம் தவறியதால்!
மழையும் பொய்திடவே!!
மண்ணுடல் மண்ணாய்
மாய்ந்தே போனேனே !!
உன் உடல் வளர்க்க நான் துடித்தேன்!
என்னுடல் காத்திட யாரும்மில்லை!!
பட்டணம் சென்றாய்!
பலசுகங்கள் அனுபவித்தாய்!!
வளர்த்த எனை பட்டிகாடாய் பார்க்கின்றாய்!!
பட்டிகாட்டில் மனுஷன் வாழ்வனாவென்று? உன் தந்தையிடமே கேட்கின்றாய் !!
கொதிக்குது என் நெஞ்சம் !!
வாய் பிளந்து உன் உதிரம்
குடித்திட துடிக்குது !!
இன்டர்நெட்டில் நீ புகுந்து
எனை மறந்தே போனாயே!!
வந்தான் ஒருவன் -எனை
கட்டம் கட்டி பிரித்தே!
பத்திரமாக பதிந்தானே!!
குற்றுயிரும் கொலைஉயிராய் இருந்த
எனை கூரு போட்டு வித்தானே!!
வயலாய் இருந்த என்னை
பலர்வாழ தரிசாய் மாற்றிவிட்டாய்!!
கரிசனம் காட்ட யாருமில்லை!!
மன ஆறுதல் என்னவென்றால்!
பத்து கட்டத்தை நீயும் வாங்கி போட்டிருக்கே !
வருவாய் மகனே !வா!! விரைவில்
என்னுள் நீ புதைவாய்!!
அப்போது என் கோபத்தை தீர்த்துகொல்வேன் !!