ரம்மி

அப்பா காப்பாத்துன்னு....
முதலாங்கார்டெடுத்தேன்
7ஆ நம்பர் கார்டு வந்து
ஏலுமலைய நினைச்சுக்கிட்டேன்...
அடுத்து வந்ததெல்லாம்
ஏழரையா ஆயிடுச்சே !!
1,2,3.... என 13 அட்டையினு
இருந்தென்ன லாபமடா ?!!
சக்காலத்தி மூஞ்சிய போல்
ஒன்னுக்கொன்னு சேராம
முறைச்சுக்கிட்டு நிக்குதடா !!
பங்காளி இறக்குவான்னு
வாய பொழந்து
பார்த்து நின்னேன்.
படுபாவி மக்கா
நல்ல கார்டு போடலையே !!
“ரம்மி”அ காட்டாம,
மூடி வச்ச கோமாளி
யாருன்னு தெரியலையே ?
ரெண்டு ரெண்டா
இருந்த அத்தனையும்
ஒன்னு ஒன்னா
இறக்கி வைச்சேன்
ரம்மி ஒன்னு சேரும்முன்னு...
இறக்குனது கோமாளின்னு
தெரியாம போயிடுச்சே !!!
போனது மட்டும் கோமாளி இல்ல
நானுந் தான்னு புரிஞ்சிடுச்சே !!!
அஞ்சற பெட்டியில
சேர்த்து வைச்ச காசயெல்லாம்
திருடிட்டு வந்தோமே,
திருப்பிக்கொண்டு வைக்கலனா
கேவலமா போயிடுமே !!
சந்தி சிரிச்சாலும் பரவாயில்ல- பத்தினி
முந்தி விரிக்காம போயிடுவா !!!
மகராசி நல்லவ தான்
மறந்துட்டா தேவலையே?? ...
அடுத்த ரவுண்டுக்காவது
நல்ல கார்டு சேர்ந்திடுமா ?
நம்பி நானும் உட்காருறேன்
காத்திடுப்பா
“காத்தவராயா”
ரெண்டா மாட்டத்துல
ஒன்னாங்கார்டெடுத்தேன்
3னா நம்பர் வர
ராசியான நம்பருன்னு
கண்ணுக்குள்ள ஒத்திக்கிட்டேன்-ஆனா!!!!!!
வந்தது பட்டையல்ல
நாமமுன்னு புரிஞ்சிடுச்சே !!!