கவிதை - இதயம் நந்தவனமாகட்டும்

இதயம் நந்தவனமாகட்டும்.

அச்சம் தெளித்தல்
மிச்சமான உலகு!
இச்சம் விலகாத
உச்ச ஆசைகள்
பச்சைக் கருவாகட்டும்
இச்சைப் பாக்களிற்கு.

ஆனந்தியுங்கள் தினம்
ஊனமற்ற எண்ணங்களை
ஏனம் ஆக்குங்கள்.
தானமாகட்டும் இன்பம்!
கானகமல்ல இதயம்!
கூனலற்ற எண்ணமுயரட்டும்.

(இச்சம் – விருப்பம். ஏனம் – பாத்திரம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-2-2014.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (16-Feb-14, 7:55 pm)
பார்வை : 146

மேலே