நகைச்சுவை 069
ஒருவன் ஒருநாள் ஒரு சாமியாரைக் காணச் சென்றான்.
அவரிடம் அவன், "வாழ்வில் அமைதியும் இன்பமும் நிலவ தான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்க, அதற்கு அந்த சாமியார், "மனைவியின் சமையலை புகழ்ந்து பாராட்டி இருக்கிறீர்களா" என்று கேட்கவும் அவன், " திருமணமாகி இருபது வருடங்களில் ஒருநாளேனும் மனைவியின் சமையலை புகழ்ந்து அவளை பாராட்டியதில்லை" என்று பெருமிதத்துடன் பதிலளித்தான்.
அதைக் கேட்ட சாமியார், "அடுத்த முறை மனைவியின் சமையலை புகழ்ந்து கூறும்படி அறிவுறித்தி அனுப்பி வைத்தார்.
அன்றிரவு, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறினாள். அதை உண்ட கணவன், மிகவும் மகிழ்ந்து சப்பாத்தி, குருமா இரண்டையும் புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தீர்த்தான்.
புகழ்ச்சியை சற்றும் எதிர்பாராத மனைவிக்கு கோபம் வந்தது.
கையில் இருந்த அகப்பையால் அவன் தலையில் "டங் டங்" என்று அடித்துக்கொண்டே, "இந்த இருபது வருடமாக என்னைப் புகழாத நீங்கள், இன்று பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோன்றியது" என்று கேட்கவும், அவன் மனதிற்குள் அந்த சாமியாரை திட்டித் தீர்த்தான்.