லவ் யு

தூங்கி கொண்டு இருந்த என்னை தொலைபேசி ஒலி எழுப்பியது எப்போதும் போல் கடவுளை வணங்கிவிட்டு போனை எடுத்தேன் .வந்த செய்தி என்ன நடுங்க செய்தது.
பாத்ரூம்க்கு சென்று கதறி அழத் தொடங்கினேன் . மீராவிடம் எவ்வாறு சொல்வது ? அவள் எவ்வாறு தாங்கிக்கொள்வாள் ?.மனதை தைரியம் செய்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். மீரா நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். மெல்ல அவளை எழுப்பினேன் .என் பீதி கலந்த முகத்தை கண்டு எதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்பதை உணர்ந்தாள்." சந்துரு ?" " ஜக்கு இஸ் நோ மோர் டி !" என்றதை கேட்டதும் அவளக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.கதறி அழுதாள். அவளை என்னால் சமாதனம் செய்ய முடியவில்லை ."ஜக்கு இல்லாம நா எப்டி இருப்பேன் சந்துரு ? எனக்கு என் ஜக்கு வேணும் ! ஜக்கு வேணும் !" என்று அழத் தொடங்கினாள் . என்னாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை .
ஜகன் எங்களது மகன். நானும் மீராவும் அவனுக்காக வாழ்ந்து வந்தோம்.ஆனாலும் எங்கள் மீது அவனுக்கு ஒரு கோபம் இருந்தது .தனிமையை விரும்பிய அவன் இராணுவத்தில் இணைந்து இன்று நாட்டிற்காக உயிரை இழந்தான் . கூட்டம் வரத்தொடங்கியது . அனைவரும் அவனுக்கு மரியாதையை செலுத்திவிட்டு எங்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர்.இராணுவ மரியாதையோடு அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டுவாரங்கள் கழிந்தன . அவனது ஆல்பத்தை நானும் மீராவும் சேர்ந்து பாத்து கொண்டு இருந்தோம் .என்னை உயிராய் நினைத்தவன் நான் அவனது தந்தை இல்லை என்பது அவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது .மீரா என்னை மறுமணம் செய்தது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. .என்னிடம் பேச மறுத்தவன் தன் தேவைகள் அனைத்தும் மீராவிடம் கேட்டு பெற்று கொண்டான் . இன்று ஜகன் இல்லாதது எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்கின.
நான் அவனை என் மகனாகத்தான் பார்த்தேன் ஆனாலும் அவன் என்னை ஏற்றுக்கொள்ளாதது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.அவன் கேம்பில் இருந்தபொழுது எழுதிய டைரி கண்ணில் பட அதை புரட்டிப் பார்த்தேன் . " to my chandru and to my meera " என்று அவன் எழுதிய கடிதம் என் கண்ணில் மகிழ்ச்சியை உண்டாக்கின.அவன் பேச தயங்கிய நான் எதிர்பார்த்த வார்த்தைகள் அதில் இருந்தது
அக்கடிதத்தின் இறுதி வரிகள் " love you chandru ! you are my great lovable appa forever " . இப்பொது என் வாழ்கை முழுமை பெற்றதாக உணர்கிறேன். " love u jagan !".

எழுதியவர் : பாலாஜி லெனின் (17-Feb-14, 1:56 pm)
Tanglish : love you
பார்வை : 346

மேலே