சிறுவன் வார்த்தை விபரீதம்
அம்மா அம்மா சீக்கிரம் வாம்மா.....குரல் கொடுத்தான் வசீகரன்
இருடா வாரேன் சமையலில் இருந்தே அம்மாவின் குரல்....
அம்மா வந்தால் ...சொல்லுடா எதுக்கு அவ்வளவு அவசரமா கூபிட்ட
போம்மா போய்ட்டாங்க ...
யாருடா போனாங்க . ...
பாட்டா பாட்டி இருவரும்
மரத்தில உங்காந்து என்னையே பாத்தாங்க
என்னடா சொல்லுற அவங்க தான் சாமிகிட்ட போயிட்டாங்களே அம்மா சொல்ல....!
எம்மா உனக்கு அறிவே கெடையாதா நீ தானே சொன்ன அமாவாசைக்கு பாட்டா பாட்டிக்கு சோறு வைன்னு ....
டேய் அது காக்காடா...
எம்மா நான் காக்கான்னு சொன்னப்ப என் தலையில கொட்டி அப்படி சொல்லாதே
அது உங்க பாட்டி பாட்டானு சொல்லிபுட்டு
இப்ப நீயே காக்கான்னு சொல்லுறா
சாரி செல்லம் காக்கா அமாவாசைக்கு தான்
பாட்டா பாட்டிய மாறி வருவாங்கடா...
சரி நீ பள்ளிக்கு கிளம்பு சீக்கிரம் ...
வசீகரனும் பள்ளிக்கு கிளம்பி போய்ட்டான்.
.
அம்மாவுக்கு ஒரே சந்தோசம் எப்படி பேசுறான் என் மகன் ...
கணவன் முரளி காலைல போனா இரவு தான் வருவார்
மணியாச்சு இன்னும் காணாம் என்ற தவிப்பில் மனைவி வாசலை எதிர் நோக்கி இருக்க ...
வெகுநேரம் கழிச்சு வண்டியில் வந்தார் ...
மனைவி பெருமூச்சு விட்டு அப்பாவந்துட்டார்
மனைவி ;என்னாச்சுங்க இவ்வளவு நேரம்
முரளி;ஒரே ட்ராபிக் நான் என்ன பண்ண
மனைவி ;சரி சரி வாங்க சாப்பிடலாம்
வசீகரன் எங்கே அப்பாவின் குரல்
மனைவி ;அவன் அப்பவே தூங்கிட்டான்
மனைவி ;எங்கா காலையில் பையன்....
முரளி ; எம்மா எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் தூக்கம் வருது
மறுநாள் ...
முரளி : வசீகரா என்னடா டல்லாஇருக்கா...
வசீகரன் ;ஒன்னும் இல்லை அப்பா ...
(மனைவியை பார்த்து நீ எதாவது திட்டினையா)
மனைவி ;இல்லாங்கா ...
முரளி;அப்புறம் எண்டா டல்லா இருக்கா ...
வசீகரன் ;அது நேத்து பாட்டா பாட்டி காக்காவா மாறிட்டாங்க .....அதான் ...
முரளி ; என்னாச்சு அவனுக்கு (நேற்று நடந்த கதையை மெதுவாய் சொன்னால் மனைவி )முரளி ;அதுக்கு போய் வருத்த பாடுவாங்களா யாராவது விடுடா....அமாவாசைக்கு வந்துற போறாங்க
வசீகரன்; அது இல்லை என் வருத்தம்
முரளி ; அப்புறம் என்னடா
வசீகரன்; பாட்டா பாட்டி காக்காவா மாறிட்டாங்க நீங்களும் நானும் எப்பப்பா மாறுவோம் !நம்ம காக்காவா மாறிட்ட சோறு யாரு வைப்பாங்க ....
முரளியும் மனைவியும் :!!!!!!!!!!!!???????
(கருத்து :எதை குழந்தைக்கு சொன்னாலும் பல தரவ யோசிச்சு நல்லதா சொல்லி கொடுக்கணும்...)