மறு இணக்கம்

கல்லூரி நாட்களோ 3 ஆண்டுகள்
அது நாங்கள் எடுத்த துறையின் அளவு
முடித்த உடன் சந்தித்த நாட்களோ மிக குறைவு

கால ஓட்டதில் கரைந்தன நினைவுகள்
ஆனால் சுவடுகள் மட்டும் சற்றும் அழியாமல்
நகர்ந்த நாட்களின் தொகையோ 23 ஆண்டுகள்

முகநூல் கொடுத்த முதல் கொடை மறு இணக்கத்திற்கான முதல் படி
நண்பர்களின் சங்கிலி தொடர் நீண்டது
மனதின் நடுவில் பதிவு இறக்கம் செய்த நினைவுகள்
கண் முன் திரைப்படமாக மாறின

கம்யுனிகேசன் கடவுளின் செல்ல பிள்ளை கைபேசி
விரல்கள் பத்தும் தேடியது 0 முதல் 9 எண்கள்

தொடர்பு கொண்ட அந்த நொடி புதியது
ஆள் முதல் குரல் வரை எல்லாம் புதியது, ஆனால்
நட்பு பழையது,நினைவு பழையது,நாட்கள் பழையது
அந்த அனுபவம் மிகவும் புதியது.

எழுதியவர் : (17-Feb-14, 3:44 pm)
பார்வை : 82

மேலே