+கற்பனை கற்பனை எல்லாம் கற்பனை+

கற்பனையில் கவிதை செய்து
விற்பனைக்கு அனுப்பி வைத்தேன்
முற்பனியில் முழுமதியாய்
நற்செய்திவர காத்திருந்தேன்

லாபம் வந்தோ நஷ்டம் வந்தோ
முதலும் வந்தோ முற்றும் போயோ
வெற்றி வந்தோ தோல்வி வந்தோ
நிலையெதுவோ நானறியேன்

நொடிகள் சேர்ந்து நிமிடமாக
நிமிடம் கூடி மணிகளாக
நெஞ்சுக்குள்ளே எதிர்பார்ப்புமழை
மனசு ஏனோ நனையவில்லை

கவிதை கடந்து நாட்களாச்சு
மனதில் முட்கள் தைக்களாச்சு
கவிதை சேதி சொல்வார்யாரோ
எந்தன் மனதை வெல்வார்யாரோ

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Feb-14, 12:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 148

மேலே