எடுக்கும் ஜென்மங்களிலும் உன் காதலி

என் வலியினை உணர முடிகின்றது .

என் கண்ணீரை துடைக்க முடிகின்றது .

என் சோகங்களை மறைக்க முடிகின்றது .

உன் நினைவுகளை மட்டும்
என்னால் எதுவுமே செய்ய முடியாது .

ஏனென்றால் ,

என் இதயத்தின் மூலைமுடுக்கெல்லாம் ,
உன் நியாபகங்கள் என்னை ஒவ்வொரு நாளும் வாட்டிவதைக்கின்றது .................

எனக்கு சரியென்று தெரிந்த காதல்
உனக்கு தவறானது ,

நான் உறவாக நினைக்க ஏங்கும் போது
நீ வீணாக விலகி கொள்கிறாய் ......

இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்
என்று எனக்கு தெரியவில்லை .

ஆனால் இந்த காயமில்ல வலியினை
என்னால் தங்க முடியவில்லை .
காரணம்-"உன் மீதான என் காதல் "

இந்த வலிக்கு மருந்து
நீயாக மட்டும் தான் இருக்க முடியும்
என் வாழ்க்கையில் ................

அதை உணர நீ எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் .
அப்பொழுதும் நான் மட்டுமே உன் காதலியாக பிறக்க ஆசைபடுகின்றேன்.......

எழுதியவர் : முத்துமீனா.ச (17-Feb-14, 5:43 pm)
பார்வை : 82

மேலே