வா நட்புக்குள் ஒழிந்துகொள்வோம்

நாம் முதன் முதலாக
முதல் வகுப்பில்
பார்த்துக்கொண்ட போதே.....
நான் அறிவேன்
நாம் நண்பர்கள் ஆகப்போகிறோம் என்று .....!

துளி துளியாய் சேர்த்து வைத்து
குவளையை நிரப்புவது போல......
என் இதயம்,
நிரம்பி வழியும் அளவிற்கு
அவன் நட்பை சேர்த்து வைத்திருக்கிறேன்.......!

எப்படி சொல்வேன் ஒரே வார்த்தயில் நண்பன் என்று.......!

துக்கத்தை துடைதெறியும்
ஈர மருந்தே கண்ணீர்...
அவன் விரல்கள் என் கண்ணீரையும்
அவன் வார்த்தைகள் என் கவலையும் துடைத்தெரிந்தன.......!

என் பின்னால் அவனும்
அவன் பின்னால் நானும்
சுற்றிதிரிந்திருக்கிறோம்.......

சுட்டி பானை வைத்து விளையாடி இருக்கிறோம்
கிச்சு கிச்சு தாம்பூலம் விளையாடி இருக்கிறோம்...
அப்போதெல்லாம் தெரியவில்லை
நீ ஆண் என்றும்,
நான் பெண் என்றும் ......
இந்த சமூகத்திற்கு......

உன்னை பார்த்து எழுதிதான்
முதல் வகுப்பில்
முதல் மதிப்பெண் எடுத்தேன்......

முன்பெல்லாம்
நான் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாய்...... இப்போதெல்லாம் நான் பார்ப்பதற்காகவே சிரிக்கிறாய்......

ஓ........ கிராம வாசிகளே.......
எங்களுக்குள் காதல் இல்லை......
காமம் இல்லை.....
நான் பெண்ணோ
அவன் ஆணோ இல்லை...
நான் உயர்ந்த ஜாதியோ...
அவன் தாழ்ந்த ஜாதியோ இல்லை....
நாங்கள் நண்பர்கள்......!

நாங்கள் எப்போது வளர்ந்தோம்....?
எப்போது பிரிந்தோம்.....?
இருபது வருடங்களுக்கு
முன்னாள் பெய்த மழையில்
இன்னும் நூறு வருடங்களுக்கு நனைந்து கொண்டுதான் இருக்கப்போகிறோம்......!

ஓடி வா நண்பா...........
நாம் நட்பிற்குள் ஒழிந்து கொள்வோம்.....!




என் ஆருயிர் நண்பனுக்கு..........!

எழுதியவர் : vidhya....... (17-Feb-14, 8:37 pm)
பார்வை : 248

மேலே