பிறப்பும் இறப்பும்
பிறப்பும் இறப்பும்
-------------------------
வந்தவையெல்லாம் தங்கிவிட்டால்
வையகம் அச்சுமையைத் தாங்காது
அதனால் பிறப்பும் இறப்பும்
பூமியின் பாரம் நீக்க
இறைவன் வகுத்த வழியாகும்
மரம் செடி கொடி பயிர்கள்
மாமலைகள் நதிகள் சமுதிரங்கள்
மற்றும் உயிர்வாழ் ஜீவன் அத்தனையும்
விண்மீனும் கோளும் அண்டங்களும்
என்றோ ஒருநாள் மறைந்தே போய்விடும்
பிறத்தலும் இறத்தலும் அவன் செயல்
அதுதான் உலகின் விதி
அதை மாற்றவும் முடியாது
நம்மால் அதை மாற்றவும் முடியாது
இதை உணர்ந்தால் ஆணவம் அகலும்
பயம் தெளியும் இறையும் புலனாகும்