இன்றும் துளிர்விடும் சிறு மனிதம்

ஒருவனுக்காய் படைக்கப்பட்ட
உணவு எவ்வழியும் அவர்களை
தடைகளின்றி சென்றடையும்
தெருவோரம் குப்பைகளாய்
உறவுகளின் உதாசீனத்தால்
உருக்குலைந்த உயிர்களிவை
பாதையோரம் கிழிந்த
துணிவிரித்து கசக்கி
எறியப்பட்ட கண்ணீர்துளிகள்
வாட்டும் கடுங்குளிரிலும்
கனலாய் தகிக்கும் வெயிலிலும்
இவர்களின் வாழ்க்கை சிலர்
இவர்களை சுயம்மிழந்தவர்
என்றும் பலர் பாவம் இந்த
பைத்தியகாரர் என்றும் வருவோர்
போவோர் எல்லாம் கண்டும்
காணாமல் இவர்களை
நாளும் கடந்தேதான்
செல்கிறார்கள் சுயமிழந்த
பைத்தியங்கள் யாரிங்கே!!!
மனிதம் என்ன இங்கு
மாய்ந்தாவிட்டது இல்லை
மனிதன் மனிதத்தை
தொலைத்துவிட்டானா ???
நல்ல உள்ளங்கள் இவர்போல்
சிலரிங்கு இருக்கவே
சிலநேர உணவேனும்
சுவையும் அன்புடன் சேர்த்தே
இவர்களுக்கு கிடைக்கிறது
சிறிதேனும் தன் முகம்தனை
சுழிக்காது அன்னம் ஊட்டியே
இவரிங்கு மகிழ இன்றும்
துளிர்விடும் சிறு மனிதம்,,,,

மனிதம்கொண்ட மனிதனாய் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Feb-14, 10:22 am)
பார்வை : 181

மேலே