காதல் தருணங்கள்

முதல் பழக்கத்தில்
வார்த்தைகளை
பரிமாறினேயடா!
நீ அன்று.........


பேசாத தருணங்களில்
பேசு பேசு என்று
அன்பை பரிமாறினேயடா!
நீ அன்று..........


பார்க்கும் தருணங்களில்
விழிகளால்
கவிதை பரிமாறினேயடா!
நீ அன்று...........


நீ அன்பு மொழிந்த
தருணங்களில்
சற்று ஒதுங்கியிருந்தேனடா!
நான் அன்று.........


நீ காதலை சொன்ன
தருணத்தில்
மௌனத்தை மட்டும் தந்து
பிரிந்தேனடா!
நான் அன்று........


இந்த பிரிவை உணர்ந்து
அன்பு அலையென ஆகி
கரை சேர வந்தேனடா!
நான் இன்று.......


என் காதலை பரிமாற
வந்த தருணத்தில்
ஒதுங்கி செல்கிறாயேடா!
நீ இன்று.........


என்னோடு நெடுந்தூரம்
வருவதாக சொன்னாயேடா!
நீ அன்று........


கொஞ்சதூரம் சென்றதும்
விலகி விட்டாயேடா!
நீ இன்று.........


அன்று
நான் பேசாத தருணங்களில்
காரணமின்றி
பேச அழைத்தாயேடா!


அதுபோல்

இன்று
நான் பேசும் தருணங்களிலும்
காரணமின்றி பேசமறுக்கிறாயேடா!


ஏனடா! இந்த மனமாற்றம்
உன்னில்!
காரணம் தான் எனக்கு
புரியவில்லை???????

எழுதியவர் : ப்ரியா (18-Feb-14, 3:50 pm)
Tanglish : kaadhal tharunangal
பார்வை : 374

மேலே