பாலு மகேந்திரா

கொடிது கொடிது
இந்த மரணம் கொடிது...
புதிது புதிது
உந்தன் மௌனம் புதிது ....

வந்து போன வாழ்கையில்
உன் கால் தடம்
கோணங்களுக்கானது....

வேதனையின் வீரியம்
உருண்டு திரண்டு
பனிமலை உடைவது போல்
உருகுவது, உயிர்....

உணர்வுகள் மறித்து போய்
நிற்கும் மணித்துளியில்
கனவுகள் என்ன செய்யும்?

கவிதைகள்
தன்னை அழித்துக் கொள்ளும்,
மாயக் கனவுகளாய்......

காட்சிகள் தற்கொலை
செய்து கொள்ளும் கணங்களில்
விழிகளை மூடிக் கொள்ளுதல்
முறையோ...?

மௌனம்
வெடித்து சிதறியும்,
விழி மிதக்கும் கண்ணீரில்
விதை ஒன்று முளைக்கிறது...
உன் எண்ணம் தாண்ட
துடிக்கிறது....

கண்ணாடி தொப்பி
உன் அடையாளம்..
அழியாத கோலங்களில்
எங்கள் விடை தேடல்....

உனது பயணத்தில்
பால்வீதியில், பிரபஞ்சம்
திரையிட்டுக் கொண்டிருக்கிறது
உனக்கான நமக்கான
புது சினிமாவை...

நீ சினிமாவின்
புதிய கண்டுபிடிப்பு...
உனைப் பார்த்தலே
எங்கள் வியப்பு...

இனி அழுக
ஒன்றுமில்லை...
அழுத்தமாய் படைக்க
நிறைய இருக்கிறது...
உன் கனவுகள் உட்பட....

எழுதியவர் : கவிஜி (19-Feb-14, 11:29 am)
பார்வை : 225

மேலே