வள்ளுவம்பால் வாழ்க்கை

அறம் பொருள் அன்பும் பயின்றால்
இல்லத்தில் இன்பம் கொழிக்கும்.

வள்ளுவன் வழியில் நின்றால் என்றும்
வாழ்க்கையில் வசந்தம் வீசும்.

இல்லாள் வள்ளுவ வாசுகியானால் வாசனுக்கு
வானமும் தாண்டும் வலிமை.

எளிமை ஏழ்மையை அகற்றும் உழைப்பு
அழியாப் புகழை கூட்டும்.

செட்டில்லா வாழ்வு சிகரத்தி லிருந்து
குன்றி லுன்னை அமர்த்தும் .

ஆமையில்லா உள்ளம் அறிவுக் கடலில்
மூழ்கி அரியாசனம் பிடிக்கும்.

ஆக்கமுள்ள மனிதம் அரசானை அமர்ந்தால்
அந்நாடு வளர்ந்து மேலோங்கும்.

ஆணவமில்லா மானிடம் தழைத்தோங் கிருந்தால்
அதர்மம் அடியோடு அழியும்.

புகழ் விரும்பி பூவுலகில் இல்லையெனில்
இவ்வுலகில் இறுதிவரை இன்னலில்லை.

மனிதம் ஒழுக்கத்துடன் ஒன்றிணைந்து விட்டால்
உயர்ந்தோங்கி பொலிவோடு நிலைக்கும்.

எழுதியவர் : பிரியாராம் (19-Feb-14, 11:50 am)
பார்வை : 93

மேலே