எத்தனை காலம் பிறகு
முகத்தில் சுருக்கங்கள்
அந்தக்கண் கண்ணாடி
உனக்குச் சேரவில்லை
உன்னை அழைத்துப்போவது யார்
உன் பேரனா?
எத்தனை காலம் பிறகு
நாம் சந்திப்பது
பேசத்தான் முடியவில்லை
நம் கண்கள் பேசியது
நீ நலமா?
உன் கணவர் நலமா?
உன் குழந்தைகள்?
உடம்பைப்பார்த்துக்கொள்
பிரியாமல் பிரிந்தாள்
விடைகொடுத்தேன்
திரும்பிப்பார்த்தாள்
ஒரு கேள்வியோடு
பதில் சென்றது
ஓ நானா
கவலைப்படாதே
நானும் சுகம்தான்-
மறைத்தேன் உண்மையை!
எப்படிச்சொல்ல
அவள் நினைவில்
வாழும் கவிதை நான்
புன்னகை பூத்தது
அவள் முகத்தில்
செயற்கைப் பல்லைக்காட்டி
கண்ணே உன் உடல்மாறிவிட்டது
என்னை நாற்பது வருடம் முன்பு
கொள்ளை கொண்ட அந்தப்புன்னகையோ
மாறவில்லை-என்னைப்போல்
-இப்படிக்கு முதல்பக்கம்