வானிலை மாற்றம்
உன் வீட்டு ஜன்னலை பொறுத்தே,
இங்கு வானிலையும் மாறுவதுண்டு...
மூடிய சாளரத்தை திறக்க முற்படுகிற
தென்றல்,புயலாகவும்,
திறந்த ஜன்னல் வழியே,
உன்னை எட்டி பார்த்த புயல்,தென்றலாய் அடங்கி போகிற
அதிசயம்
வானிலை மையத்திற்கு எப்படி தெரியும்?