அசிங்கம்
சிங்கம் மட்டும் வேண்டுமாம்!
சிறுத்தையை கண்டால் கொல்வானாம்!
சிங்கம் என்றே சொல்லியே!
யானையின் பின் வந்து வென்றானாம்!
முறத்தில் புலியை விரட்டிய மறவரை
கொன்றே குவித்தான் புதைகுழியில்!
வீரம் வீரம் என்றே கொக்கரித்து
பதுங்கு குழிக்குள் இருக்கானே!
இரத்த வாடை கண்டவனே
குத்தி குதறி போட்டவனே!
பிஞ்சு குழந்தையை நெஞ்சினில்
சுட்டு கொன்றவனே!
நீ நஞ்சு தின்றா உடல் வளர்த்தாய்
ஏமாளி என எம்முதுகேறி விட்டாய்!
உன்னை கோமாளியாக்காமல் விடமாட்டோம்!
கோமாவில் படுத்தாலும்
குத்தி குதறும் உன் சொந்தம்!
சத்தியம் வெல்வதுறுதி !!