எது நான்

ஒரு கல்
ஒரு சொல்
எது உன்னைக் காயப் படுத்தும்...

ஒரு அழைப்பு
ஒரு நிராகரிப்பு
எது உன்னை ஆற்றுப் படுத்தும்...

ஒரு உளி
ஒரு விழி
எது உன்னை உடைத்துப் போடும்...

ஒரு மொழி
ஒரு மௌனம்
எது உன்னை ஒட்ட வைக்கும்...

ஒரு பண்
ஒரு கண்
எது உன்னைப் பித்தனாக்கும்...

ஒரு தேடல்
ஒரு கூடல்
எது உன்னைப் புத்தனாக்கும்...

ஒரு தூண்டில்
ஒரு விண்மீன்
எது உன்னைப் பசியாற்றும்...

ஒரு கடவுள்
ஒரு சாத்தான்
எது உன்னைக் காவு கேட்கும்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (20-Feb-14, 12:43 am)
Tanglish : ethu naan
பார்வை : 528

மேலே