சென்ரியு-சிவநாதன்
 
            	    
                மேசைமேல் கண்ணைக் கவரும் வாசகம் 
"கை நீட்டி லஞ்சம் வாங்காதே" 
அதிகாரி காலடியில் கோவில் உண்டியல். 
********************************************************** 
கூர்க்கா சுகவீன விடுமுறையில் 
வாயிலில் மேலதிக நேரக் கடமையில் 
நன்றியுள்ள நாய்.  
************************************************************ 
 கட் அவுட் பாலாபிஷேகத்தில்  
கால் இடறி விழுந்து இறந்த ரசிகருக்கு 
நடிகர் கொடுத்தது ட்வீட்டரில் அஞ்சலி 
************************************************************** 
தலைவர்  நாட்டுக்காக உண்ணாவிரதம் 
கையோடு பையில் ஒளிந்திருக்கிறது 
தாகம் தணிக்க திராட்சைச் சாறு 
 ************************************************************ 
குலுங்கி குலுங்கிச் சிரித்து 
மருமகளைக் கடுப்பேத்துகிறது 
மாமியார் இடுப்பில் சாவிக் கொத்து 
************************************************************* 
"உங்கள் வாக்கு எங்களுக்கே 
(ச)சுத்தமாகப் போடுங்கள்" 
பொதுக் கழிப்பறையில் புதுவாசகம் 
*****************************************************************
	    
                
