பொம்மலாட்டம்

நாணி....கோணி
பெருவிரலால் கோலமிட்டு
பூக் குவியல்
பொதி சுமந்து
நடமாடும் நகைக் கடையாய்
அரிதாரம் பூசிய நடிகையாய்
காஞ்சி பட்டுக் கட்டி
வெட்கத்தில் முகம் சிவந்து
அன்னமாய் நடந்து வந்து
காபி டிபன் கொடுத்துவிட்டு
கைக் கூப்பி வணக்கம் சொன்னாள்
அவள் சொன்ன
நாற்பதாவது வணக்கம் இது
வழக்கம் போல் வந்தவர்கள்
போய் லெட்டர் போடுகிறோமென
பொடி வைத்தே பேசினார்கள்
தினமும் நடக்கும் இந்த பொம்மலாட்டதில்
அவள் பொம்மையாகி போனதேனோ நிஜம்.....

எழுதியவர் : சித்ரா ராஜ் (19-Feb-14, 10:32 pm)
பார்வை : 86

மேலே