சுமை
![](https://eluthu.com/images/loading.gif)
கன்னிப் பருவத்தை கடந்து மகள்
காளை பருவமடையா மகன்
வயோதிகப் பருவத்தில் மனைவி
தள்ளாடும் பருவத்தில் தகப்பன்
குடும்ப சுமை தூக்கி தூக்கி
தோள்கள் துவண்டு போயின
கல்யான கனவு மகளுக்கு
கற்பனை கனவு மகனுக்கு
கடன் அடைக்கும் கவலை தந்தைக்கு
மாலை மகளுக்கு
வேலை மகனுக்கு
சேலை மனைவிக்கு
மஞ்சள் தாலியையும்
மடியில் பிள்ளையையும்
மகள் சுமக்க
கடனையும், கடமையையும்
தகப்பன் சுமக்கிறான்