மீசை இல்லா ஆண்
![](https://eluthu.com/images/loading.gif)
மீசை இல்லா ஆண்களை
நான் ரசித்ததில்லை
மீசை என்பது
ஆண்மையின் அடையாளம்
ஆளுமையின் கம்பீரம்
இப்படி தான்
நேற்று வரை சொல்லி வந்தேன்
இன்று
மீசை இல்லா அவனை கண்டேன்
மழித்த முகத்தில்
அத்துனை செழிப்பு
செழித்த முகத்தில்
அத்துனை ஜொலிப்பு..
கருத்தை மாற்றிக் கொண்டேன்
குழந்தையான குமரனுக்கு
மீசை எதற்கு....?