இனிய தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
****************************************************************
உண்மையான தோழமைகளை
இதயத்தில் சிறப்பித்த எனக்கு
பெண்மையான இந்த தோழியின்
இதயத்தில் சிறப்பிடம் இருக்கு.
ஆண்-பெண் நட்பு நிதானம்
நாங்கள் அதன் உதாரணம்
எல்லையில்லா எங்கள் நட்பில்
எல்லை மீறியதில்லை..!
நொடிக்கு ஒரு முறை
வெடி சிரிப்பு பூத்திடுவாள்
தேடி வந்த தோழமையை
ஜோடி மலராக போற்றுவாள்.
இப்படிப்பட்ட இந்த பூவிற்கு
எப்படிப்பட்ட வாழ்த்து எழுத?
நட்புப்பட்ட சொற்களை நாடி
புலப்பட்டது அர்த்தங்கள் கோடி
என் இனிய தோழியே....!
கோடி அர்த்தங்களும் கூடிய
என் தூய்மையான அன்பு பூக்கள்
வாழ்க! வாழ்க ! நீடுழி வாழ்க!!
என்று உனை வாழ்த்துகிறது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி !
----------------------------------------------------------------------------
..........இரா.சந்தோஷ் குமார்