பரீட்சை அறை

வருடும் வாடை காற்று...
பரப்பரப்பான சாலை...
ஜன்னல் ஓர இருக்கை...

ஒன்றும் அறியா கேள்வித் தாள்
அனைத்தும் அறிந்தது போல்
என் விடைத் தாள்...!

அதையும் துருவும் என்
நண்பர்களின் புருவம்...

படித்தது முக்கால் நாள்
எழுதியதோ
முக்கால் நாழிகை ...

விடை மதிப்பு இல்லா இதை எழுத...
இருவர் பாதம் தேய்கிறது
அறை கண்காணிப்பாளர்கள்.... !

எழுதியவர் : மகு (19-Feb-14, 5:35 pm)
பார்வை : 804

மேலே