மகாலட்சுமி ரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகாலட்சுமி ரா |
இடம் | : நெல்லை |
பிறந்த தேதி | : 04-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 446 |
புள்ளி | : 26 |
“Better to be strong than pretty and useless.”
நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?
நினைவுகளுடன் வாழ
தெரிந்த பிறகு
நிஜம் எதற்கு ?
நினைவுகளுடன் வாழ
தெரிந்த பிறகு
நிஜம் எதற்கு ?
மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!
கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!
இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!
சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி !!
தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது எ
வாடகை வீடு..
வருடும் வாடை காற்று..
சேமிப்பாய் மாறும் சில்லறை..
சிதறி போகும் சந்தோஷம்..
கையில் தங்காத காசு..
அதை தொட்டு தடவும் மனசு..
மரமாய் வளாரும் கடன்..
குடை காலனை மாறும் மதிப்பு..
விட்டு செல்லும் பந்தம்..
அதை நினைத்து நெஞ்சம் பதறும்...
தண்ணீரில் தெரியும்,
நிலாவின் பிம்பம்,
-நான்...
தொட்டால் உடைந்து போவேன்,
என்பது தெரியாமல்,
என்னை கலைத்துப் பார்க்கும் குழந்தை,
-நீ....!
தனிகரற்ற என் தாய்...
யாருக்கும் நிகரற்ற என் தந்தை...
தன்னலமற்ற என் தமக்கையன்...
பொருள் நிகரற்ற என் ஆசான்...
பயமற்ற என் தோழன்...
இன்றோ...
என்னை விட்டு அகன்ற
நீ !
வருடும் வாடை காற்று...
பரப்பரப்பான சாலை...
ஜன்னல் ஓர இருக்கை...
ஒன்றும் அறியா கேள்வித் தாள்
அனைத்தும் அறிந்தது போல்
என் விடைத் தாள்...!
அதையும் துருவும் என்
நண்பர்களின் புருவம்...
படித்தது முக்கால் நாள்
எழுதியதோ
முக்கால் நாழிகை ...
விடை மதிப்பு இல்லா இதை எழுத...
இருவர் பாதம் தேய்கிறது
அறை கண்காணிப்பாளர்கள்.... !