என் கல்லூரி தோழி
அறிமுகம் இல்லாமல் பார்த்து கொண்டோம்
அருகில் தயக்கத்துடன் அமர்ந்து கொண்டோம்
மதிய வேளையில் பகிர்ந்து உண்டோம்
மதிப்பெண்களில் நம்மை நாமே மதிப்பிட்டு கொண்டோம்!!!
அடிக்கடி காரணம் இல்லாமல் சண்டையிட்டோம்
அடுத்த நாள் கர்வம் இல்லாமல் பேசி கொண்டோம்
கல்லூரித்தேர்வு தோல்விகளால் கவலையுற்றோம்
கவலை மறக்க அரட்டை அடித்து நம்மை தேற்றி கொண்டோம்!!!
மனதால் நெருங்கி நம்மை புரிந்து கொண்டோம்
மனமில்லாமல் பிரிவை ஏற்க பழகி கொண்டோம்
காலத்தால் அழியாத நட்பிற்கு இலக்கணம் கொடுத்தோம்
கல்லூரி முடிவில் கண்ணீர் துளியை துடைத்து கொண்டோம்!!!
காலம் நம்மை பிரித்தாலும்
கடந்து தூரம் சென்றாலும்
என்றும் இனிக்கும் நம் கல்லூரி நினைவுகள்!!!