கசக்கும் முத்தங்கள்

நான் மன்றாடி கேட்பதற்கு,
நீ ஒன்றும் கடவுளல்ல..
-என் காதல்..

உன்னையே நாடித் திரிய,
நான் ஒன்றும் அலைகளல்ல..
-ஆழ்கடல்..

மறுப்பதாய் கூறி,
நீ என்னை இழப்பது,
எனக்கு வெறும் விபத்துதான்..
உனக்குதான் அது,
ஆபத்து..

ஏனெனில்,
உன் முத்தங்களில் கேட்கும்,
சத்தங்கள் நான்..
என்னை பிரிந்துவிடாதே..
பிறகு உன் முத்தங்கள்,
கசக்கத்தான் செய்யும்.....

எழுதியவர் : புவி (20-Feb-14, 3:03 pm)
Tanglish : kasakkum muthangal
பார்வை : 210

மேலே