அப்பா உனக்காக ஒரு கவிதை
அப்பா உனக்காக ஒரு கவிதை
என் அப்பா உனக்காக ஒரு
கவிதை எழுத ஆசைப்பட்டேன்.............
அன்று நீ சொன்ன வார்த்தைகள்
ஒவ்வொன்றும் அருவிகளாய் பெருக்கேடுத்தோடின
அதை தாண்டி கடக்கத்தான் ஆசைபட்டேனே தவிர
அதில் இறங்கி குதூகலிக்க மறுத்தேன்................
மறுத்தது தவறென்று உணர்ந்தேன் இன்று
நம் சொந்த ஊரிலிருந்து
அம்மாவின் சொந்த ஊருக்கு என்னை கூட்டி சென்றாயே
அது ஞாபகம் இருக்கிறதா?.......................
நீ மறந்தாலும் நான் எப்படி மறப்பேன்
உன் தோலினால் என்னை சுமந்த நாட்களை.............
ஜாலியாக சவாரி செய்த நாட்களை எண்ணி சந்தோசபடுவதா?
உனக்கு சுமையாக இருந்ததை எண்ணி கவலைப் படுவதா?
உன்னிடம் இதை சொன்னால் இன்றும் சிரிப்பாய்
உனக்கு பிடித்த நடிகர் யார் என்று நான் கேட்க்க
சூப்பர் ஸ்டார் ரஜினி என்பாய்..................!
இப்போ உணர்கிறேன்
உனக்கு அவரை பிடிக்க சரியான காரணம் இருக்கின்றதென்று
உண்மையில் உன்னைப்போல் அவரா?
அவரை போல் நீயா?
பெருமையுடன் சொல்கிறேன் அப்பா
உன்னைப்போல் நல்லமன்கொண்ட மாமனிதர் அவர்.........!
நண்பனை தேர்ந்தெடு.......! தேர்ந்தெடு......! என்பாயே
உன் சொல் கேளாது தேர்ந்தெடுத்த நண்பனை
நம்பி கெட்டேன்............!
அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்
என்னை மன்னிப்பாயா?..............
எப்போதும் உனக்கு மகனாக பிறக்க
ஆசைபடுகிறேன்....................
அந்த வாய்ப்பை அடுத்த பிறவி என்ற ஒன்று
இருந்தால் அதிலும் தந்தருள்வாயா?
என்றும் நலம்பெற வாழ்த்தும் உன்னன்பு மகன்
சுரேன் ........................................!