பாதுகாப்பு

சுவாமியின்
சன்னதியில்
சுழல்விளக்கு...
சூடிய நகையும்
சுடர்விட்ட வைரம்
கோடியில் பணமும்
கொள்ளையர் கைவரிசை........
காக்கிச்சட்டைகளின்
கைகளிலிருந்த
மோப்ப நாய்கள்
முனு முனுத்தன....
சாமியின் கையில்
ஆளுயர அரிவாள்...

எழுதியவர் : சிவகவி (20-Feb-14, 10:17 pm)
பார்வை : 92

மேலே