வித்து ஒன்றை விதைத்தார் மண்ணில்
வித்து ஒன்றை விதைத்தார் மண்ணில்
விஷமும் சற்று வைத்து அதனுள்
விளைந்த வித்து விருக்ஷம் ஆகி
விரித்தது கிளைகள் மேலும் ஒன்று
அண்ணன் தம்பி அக்காள் தங்கை
என்றே சொல்லி ஒன்றாய் இருந்தோம்
ஆந்திரர் தமிழர் என்றே சொல்லி
பிரித்தார் பேசும் மொழியைக் காட்டி
ஒன்றாய் இருத்த ஆந்திர தேசம்
ரெண்டாய் உடையும் என்றா நினைத்தாய்
பிரிவினை வாதிகள் செய்யும் சதியால்
ஆந்திர நாடு உடைந்தது கண்டோம்
சீமந்த் ராவும் தெலுங்கா னாவும்
பேசும் மொழியில் ஒன்றா னாலும்
வீசும் காற்றில் வேதனை தெரியும்
கிருஷ்ணா நதிநீர் போகப் போக