இசை
மெல்லிய மயிலின் இறகின்
வருடலைக் கூட தேகம் அறியும்
இசையே உன்னை யாரும் அறிய முடியாது
துளையிட்ட முங்கிலில் வரும் காற்று
காலை விடியலை கீதமாகும்
இரவின் அமைதியைக் கூட
தாளம் கொண்டு
மனதினை மயக்கிய மாயக்காரி
அழும் குழந்தைக்கு தாலாட்டாய்
இறக்கும் மானிடற்கு ஒப்பாரியாய்
துவண்ட மனதிற்கு நம்பிக்கையாய்
மனிதனின் எல்லா நிலையிலும் வாழ்பவள் நீ