வருகிறார்கள் நாற்காலி நாயகர்கள்

ஒட்டிக் கிடக்குது
வயிறு
வாடிக் கிடக்குது
முகமும் உடலும்
கட்டிக் கிடக்குது
கண்களில் கண்ணீர்
ஓட்டுப் பெட்டி
ஏந்தி வருது கூட்டம்
இந்நாட்டு மன்னனுக்கு
சேவை செய்ய !


ஆடையின்றி மனிதர்கள்
விழுந்து கிடக்கிறார்கள்
வீதியில் !
மேடையில் கொடிகட்டி
வெறுங் கூச்சலிடுகிறது
அரசியல் !

வீதி எல்லாம்
வண்ணக் கொடிகள்
பட்டொளி வீசிப் பறக்கும்
கம்பம் !
உடுத்த உடையின்றி
உண்ண உணவும் இன்றி
அரைகுறை அம்மணத்தில்
பாவம் ஏழை சனம் !

வருகிறார்கள்
நாற்காலி நாயகர்கள்
விடியலுக்கு
பொய்யில் புதிய ஆத்தி சூடியுடன்
விழித்திருங்கள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Feb-14, 10:45 pm)
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே