முதல் நாள் ஒன்று

முட்களின் மீது என் பாதங்கள்
என்னவளுக்கு வழி விட்டது...
என் மூச்சி காற்றும் சில நிமிடங்கள்
மூச்சி விட தினறியது - அவள்
துப்பட்டாவின் உரசலில்...
இது வரை நான் படித்திராத வரிகளில்
பிரம்மன் தொலைத்த கவிதையொன்று
என் சாலை ஓரத்தில்...
அரை குறையாக வரையப்பட்ட
ஓவியம் போல் நான்,
என்னை வரைய மறந்த "தூரிகை" அவள்...
இமைக்க மறுக்கும் என் கண்கள்
அவள் அழகை ரசிக்கும் புது கவிதை...
சற்று தூரம் சென்ற பின்பு ஓர் பார்வை
என் காத்திருப்பிற்கு ஓர் ஆறுதல்...
ஒரு கண்ணாடியைப்போல் வாழ்கின்றேன்
இன்னும் கூட,
அவள் முகம் காணாதா என்று...
இப்படிக்கு
-சா.திரு-