முடியலப்பா சிரிச்சி சிரிச்சி

1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"

"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"
==========================================

2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?"

"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
==========================================

3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"
=========================================

4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"

"பாய் வியாபாரம்!"
=========================================

5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
===========================================

6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?"

மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
==========================================

7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?"

திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"
==========================================

8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"
==========================================

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (21-Feb-14, 11:35 am)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே