இன்னிசை அகரம்

அன்புள்ள காதலியே!...
ஆசையில் ஓர் கடிதம்...

இன் முகம் மாறி விட்டேன்
ஈரம் இன்னும் மாறவில்லை!

உன் இதழின் முத்தத்தால்
ஊறிப் போன நெஞ்சத்திலே
எழுதாத காவியமாய்
ஏதேதோ கற்பனைகள்...

ஐயிரண்டு திங்களிலே
ஒரு கோடிக் கவிதை செய்தும்
ஓசையில்லா என் மனதில்
ஔஷதமாய் உன் நினைவு...

அத்தனையும் அரங்கேறும்
ஆயிரம் கோடி இன்பம் வரும்!

எழுதியவர் : மனோ & மனோ (22-Feb-14, 11:29 am)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
Tanglish : innisai akaram
பார்வை : 85

மேலே