பெண் சித்திரம்
கண்கள் கவிபாட.....
கண்ணிமைகள் தாளம் போட.,
இமைக்கும் இமைகளில்,
தீட்டப்பட்ட மையும்
சிந்து பாடுகிறது...........!
காஞ்சிபுரம் பட்டு,
ஜொலி ஜொலிக்கிறது
மெய்யில் மெய்யாக .......!
கையில் வளையல்
கலகலக்கிறது....
A.R . ரகுமானின் இசையும்
தள்ளி நிற்கிறது.........!
காலோடு கொலுசுகள்
காதல் மொழியில்
சினுசினுங்குகிறது........!
பின்னாத பின்னலை
தொட்டுக்கொள்ள வெட்கப்படும்
தொடுக்கப்பட்ட மல்லிகை .........!
வைக்கப்பட்ட குங்குமம்
வட்டமிட்டு காட்டுகிறது
முழுமதியின் வடிவத்தை........!
பூசிய மஞ்சள்
தென்றலில் தூது போகிறது
செவ்வந்தி பூவிடம் ............!
"பெண் சித்திரத்தை......
பேனாவால் வரைந்து,
என்னுயிர் கொண்டு
உயிர் கொடுத்தேன்.......!"
உயிர்பெற்ற சித்திரம்
தட்டி எழுப்பியது
எனை...........
ஓவியனாய்............!