அஞசலட்டை

எங்கே எங்கள் அஞ்சல் அ்ட்டை?

சட்டையே போடா அஞ்சலட்டை
சனங்களில் தூது செல்லட்டை
வௌிப்படை இத்தபாலட்டை
வௌ்ளை உள்ளம் சொல்லட்டை

உன் மேல் நடை பயின்றது என்பேனா
உன் பணி சிறிது என்பேனா
நண்பனை சேர்த்தது உன் பணிதானே
நற்பை வளர்த்ததும் நீதானே

அச்சம் இல்லை நீ வந்தால்
அன்பாய் தகவல் நீ சொன்னாய்
அடுக்காய் பல நீ என்னிடத்தில்
அன்பின் பதங்கள் உன்னிடத்தில்

பழுப்பாய் உன்னுடல் இப்போது
பழைமை ஆனதைச் சொல்கிறது
பழசாய் என்வசம் இருந்தாலும்
பதமாய் பலவும் சொன்னாயே

உன் பணி பெரிது நான் என்பேன்
உழைப்பவர் போற்றும் தபாலென்பேன்
நவீனம் உன்னை மறைத்தாலும்
நயமாய் உன்னை நானினைப்பேன்

எழுதியவர் : ஜவ்ஹர் (22-Feb-14, 10:49 pm)
பார்வை : 70

மேலே