காதலாம் காதல்
அழுதபின் கண்ணீர் வற்றும்
மனமுடையத் தேம்புகிறேன் ; என்னை
மீண்டுமா காதல் தொற்றும் ?!
தேடித் தேடி அலைந்தேன்
கனவாகிப் போனதில் உறக்கமில்லை
மீண்டும் கனவில் தொலைந்தேன்
மௌனத்தில் காதல் விழிகள்
இமைகளும் இடையூறலாம் ; என்றாலும்
தடுக்க ஏது வழிகள் ?!
வலுக்கிறது குற்றச் சாடல்
நீயா நானா போட்டிக்குப் பின்
மிச்சமாகிப் போனது ஊடல்
பூவெல்லாம் உன் வாசம்
காதலில் பொய்யழகாம் இப்படி ; ஆனாலும்
வாடுமா என் நேசம் ?!
-புலமி