உயிரின் நிழல்
மேகங்கள்
மோகம் கொள்ளும்
மழை காலத்தில்
பிறந்தவள் அவள்......!
அவள் நிஜமெனினும்
என் காதல்.......
அவள் நிழலையே
காதலிக்கிறது......!
மின் விளக்கில்லாத
இரவுகளில் மெழுகுவர்த்திச்
சுடர்களின்ரகசிய
நடனம் போல
என் மனதின்
அந்தப்புர அறைகளிலெல்லாம்.....
மெழுகுவர்த்தி ஏற்றுகிறாள்.......!
தொடுவானத்தில்...
கை தொடும் தூரத்தில்
அவள் இருந்தும்......
கண்ணுக்கெட்டிய
தூரம் வரை அவள்
நிழல் காணவில்லை.......!
பயண களைப்பில்
நிழல் தேடிய
காலங்கள் மாறி,
களைத்தும் பயணிக்கிறேன்
என்னவள் நிழல் தேடி......
இலை பறித்து வழிப்பறி
செய்த என்னவளுக்காக
சாலையோர செடிகளிடமெல்லாம்
ஆயுள் கைதியாய் சரணடைகிறேன்......!
என்னவள் வெயில்
தணிக்க ....
என்னுயிரின் நிழலை
நிழற்குடையாக ஏந்தி
காத்திருக்கிறேன்.............!
அவளின் மூச்சு
காற்றின் நிழலை எல்லாம்
என் உயிரணுக்கள்
கொண்டு பாதுகாக்கிறேன்........!
இன்னும் என்ன சொல்ல......
அவளின் நிழலுக்கு
இருக்கின்ற இரக்கம்
கூட அவளுக்கு
என் மேல் இல்லை..........!
என்னை போலவே
என்னவளின் நிழலும்
பின்தொடர்கிறது அவளை......!